சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில அளவிலான பரிந்துரை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் விவரம் வருமாறு:
எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை தேர்ச்சியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற 1.1.2010 அன்று 57 வயதுக்குள் உள்ளவர்களுக்கான பதிவு மூப்பு விவரம்.முன்னுரிமை உள்ளவர்கள்தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்), பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - 10.12.2010 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை பிரிவைச் சார்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்), பொதுப் பிரிவினர்- 10.12.2010 வரை பதிவு செய்துள்ள ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம் புரிந்தவர்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்)- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி 19.01.2009 ஆகும்.மிகவும் பிற்பட்ட வகுப்பினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி- 24.03.2008.பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) பொதுப் பிரிவினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி: 26.05.2008.
முன்னுரிமை இல்லாதவர்கள் (பதிவு மூப்பு அடைப்புக்குறிக்குள்)தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பெண்கள்) (12.3.2007)- 09.06.1984-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பொது) (27.02.2006)- 25.05.1986-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) (24.03.2008)- 05.06.1984-ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொது) (12.03.2007)- 01.06.1975-க்குள் பிறந்தவர்கள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (11.10.2004)- 17.02.1984-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (27.02.2006)- 28.03.1986-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) (01.12.2003)- 13.01.1983-க்குள் பிறந்தவர்கள்.
மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு தங்களது அனைத்து கல்விச் சான்றுகள், முன்னுரிமைச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் பெறப்படும் விசாரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் சு.பெ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.