Tuesday, January 25, 2011

வேலை வாய்ப்புகள் குவிந்துள்ள உளவியல் படிப்புகள்

மனித மனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய்வது தான் உளவியல். இந்த பதில் கிடைக்காத கேள்விக்கு யூகத்தின் அடிப்படையில் பதிலளிப்பது உளவியலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சரியாக யூகம் செய்யும் திறன், ஆர்வம், பொறுமை, தகவல் தொடர்வு திறன் ஆகியவை இந்த துறைக்கு இன்றியமையாதது. இந்த துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து உளவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

உளவியலில் பல துறைகள் அடங்கியுள்ளன. இதில் கல்வி உளவியல், சமூக உளவியல், தடய உளவியல், கலாசார உளவியல், எக்ஸ்பிரசிவ் தெரபி, ஆற்றுப்படுத்தல் உளவியல், செயற்கை அறிவு, மனிதக்கூறுகள், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியல், பிறழ்வு உளவியல் ஆகிய பிரிவில் கூடுதல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்து துறையில் மனநல மருத்துவராக பணி புரிவதற்கு மருத்துவ படிப்புகளை பயில தேவையில்லை. இந்த துறை பட்டமேல் படிப்புகளை முடித்து, பணியில் நல்ல அனுபவம் பெற்றாலே மனநல மருத்துவராக பணிபுரியலாம்.

படிப்புகள்
* பி.ஜி., டிப்ளமோ (கிளினிக்கல் அண்டு கம்யூனிட்டி சைக்காலஜி)
* பி.ஜி., டிப்ளமோ (சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்)
* பி.ஏ., (சைக்காலஜி)
* எம்.ஏ., (கிளினிக்கல் சைக்காலஜி)
* எம்.ஏ., (கவுன்சிலிங் சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (அப்ளைடு சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (ஹோலிஸ்டிக் சைக்காலஜி)

கல்வி நிறுவனங்கள்
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
* பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு

வேலைவாய்ப்புகள்
தற்போது அனைத்து துறைகளிலும் உளவியல் நிபுணர்களின் தேவை கட்டாயமாக இருக்கிறது. கவுன்சிலிங், சோதித்தல், ஆராய்ச்சி, நிர்வாகம், சுகாதாரத் துறை, மனநல மருத்துவ மையங்கள், அரசின் மறுவாழ்வு மையங்கள், சட்டம், காவல் துறை, சமூக சேவகர்கள், சமூகவியலாளர்கள், கருத்துக்கணிப்பு ஆராய்ச்சியாளர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், தொழிலாளர் உறவுகள் மேலாளர்கள் ஆகிய

பிரிவுகளில் உளவியல் நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசுத்துறை, வெளிநாடு களிலும் உளவியலாளர்களின் தேவை இருக்கிறது. இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. பின்னர் தங்களது தகுதி, திறமைக்கேற்ப ஊதியம்

பன்மடங்கு உயரும். இந்த துறையில் சமூகத்தின் நிலைமையை அறிந்து, அதற்குகேற்ப செயல் படுவதால் சமூகசேவை செய்யும் மனநிறைவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment