Friday, January 7, 2011

சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு

இந்தியாவிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான பொது சட்ட நுழைவுத்தேர்வு(கிளாட்) வரும் மே மாதம் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இளநிலை படிப்பில் சேர, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், ஓ.பி.சி./எஸ்.சி/எஸ்.டி./ஊனமுற்ற மாணவர்கள் 45% மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

முதுநிலை படிப்பில் சேர, எல்.எல்.பி. மற்றும் அதற்கு சமமான தேர்வுகளில், பொதுப் பிரிவு மாணவர்கள் 55% மதிப்பெண்களும், ஓ.பி.சி./எஸ்.சி/எஸ்.டி./ஊனமுற்ற மாணவர்கள் 50% மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதங்களில் தகுதி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும், இந்த நுழைவுத்தேர்வை எழுத தகுதி வாய்ந்தவர்கள். இம்மாதம் 11 ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் மற்றும் விவரக் குறிப்புகளை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களில் ரூ.150 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 2.

No comments:

Post a Comment