எம்.பில் மற்றும் பிஎச்.டி. ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளும் எஸ்.சி. மாணவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி தேசிய உதவித்தொகை திட்டத்திற்காக, மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், யு.ஜி.சி. -க்கு ரூ.22 கோடியை ஒதுக்கியுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த திட்டத்தில் இதுவரை பயன்பெற்ற 1333 என்ற மாணவர் எண்ணிக்கையை, 2000 என்ற அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த 2005-06 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை அதிகளவிலான எஸ்.சி. மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment