விருதுநகர் : பள்ளிக்கல்வித்துறையால் துவக்கப்பட்ட "வெப்சைட், அப்டேட்&' செய்யப்படாததால் விபரங்கள் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2007ம் ஆண்டு, 50 லட்ச ரூபாய் செலவில் "வெப்சைட்&' துவக்கப்பட்டது.
பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு, உதவி பெறும் மற்றும், தனியார் பள்ளிகள் குறித்த விபரங்கள், இலவச சைக்கிள், சீருடை வழங்கல், மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தரம் கூட அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டாலும், கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு பெறாமல் உள்ளனர். இதனால் "வெப்சைட்டில் 2008 வரை அப்டேட் செய்யப்பட்டது. அதன் பின் எந்த தகவல்களும் அப்டேட் செய்யப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை அலுவலகங்களிலிருந்து பல புள்ளி விபரங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
புள்ளி விபரங்கள் சேகரித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறது என பள்ளி கிளார்க்குள் தெரிவித்தனர். பல விபரங்கள் பெறப்பட்டாலும் அப்டேட் செய்யப்படாததால் திரும்ப, திரும்ப விபரங்களை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் காலதாமதம், சிரமம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment