Friday, January 7, 2011

மத்திய அரசு பணி வாய்ப்பு


இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் சர்வதேசப் பிரசித்தி பெற்ற டபிள்யூ. எச்.ஓ., மற்றும் யூனிசெப் அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசால் பொதுத் துறையில்  துவங்கப்பட்ட முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், ஆம்பிசிலின், அமாக்சிலின்  போன்ற மருந்துகளை முதன் முதலாக வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த நிறுவனமும் இதுதான். இந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ்  பிரிவில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு
இந்த மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 1.4.2010 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
பி.இ., அல்லது பி.டெக்.,கில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., எம்.சி.எஸ்., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். முழு  விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். இதர தகவல்கள் இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவன மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஸ்டைபண்டாக ஒரு ஆண்டு பயிற்சிக்காலத்தில் வழங்கப்படும். இதன் பின்னரே முழு நேர இன்ஜினியர்களாகப்  பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின் மாதம் ரூ.23 ஆயிரத்திற்குக் குறையாமல் சம்பளம் கிடைக்கும். இதன் பின்னர் மூன்றாண்டு  காலத்திற்குப் பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.


விண்ணப்பிப்பது எப்படி
இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் நகல், கல்வித்  தகுதிக்கான சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் பின் வரும் முகவரிக்கு 5.1.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


முகவரி
Personnel Manager,
Hindustan Antibiotics Ltd.,
Pimpri, Pune - 411 018.

No comments:

Post a Comment