விருதுநகர்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் பணி மூப்பு, 2011 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரித்து வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் ஜனவரியில் பெறப்படும். காலிப் பணியிடங்களை நிரப்ப இடமாறுதல் குறித்து ஆசிரியர்களுக்கு மே 15ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இதன் பின்னரே பதவி உயர்வு ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும். ஏற்கனவே தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் பெறப்பட்டுள்ளது.
தற்போது, 2011 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாஸ்த்ரா பல்கலையில் பி.எட்., பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தனியாக தயாரித்து உடனடியாக வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment