குரூப் 2 தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கள்கிழமை முடிவுகள் வெளியிடப்படுவதாக இருந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் தேர்வை எழுதியுள்ளவர்கள் திங்கள்கிழமை காலையில் இருந்தே முடிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்துக்குள் சென்று தேர்தல் முடிவு வெளியிடப்படுகிறதா என்பதை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்படுவது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வை எழுதியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நகராட்சி ஆணையாளர் உட்பட பல்வேறு குரூப் 2 பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment