Sunday, January 2, 2011

என்.ஐ.டி.,யில் ஆராய்ச்சிப் படிப்புக்கான அறிவிப்பு - NIT

முன்பு ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் (ஆர்.இ.சி.,) என்று அழைக்கப்பட்ட கல்வி நிறுவனம் தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) என்று அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு திருச்சியில் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனம் சர்வ தேசப் பிரசித்தி பெற்றது. இந்தக் கல்வி நிறுவனத்தில் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய முழு நேரப் படிப்பாகப் படிக்கும் எம்.எஸ்., மற்றும் பி.எச்.டி., ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவை என்ன : எம்.எஸ்., பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்துடன் 'கேட்' தேர்வு மதிப்பெண்ணும் தேவை. பி.எச்.டி., ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர இன்ஜினியரிங், அறிவியல், ஹியூமானிடிஸ் (ஆங்கிலம்), நிர்வாகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கேட், ஜே.ஆர்.எப்., என்.இ.டி., போன்ற ஏதாவது ஒரு தேர்வு மதிப்பெண்ணும் கூடுதலாகத் தேவைப்படும்.

தேர்ச்சி முறை : விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதி உடையவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப் தொகை எவ்வளவு ? : எம்.எஸ்., பிரிவு ஆராய்ச்சிப் படிப்புக்கு ரூ.8 ஆயிரமும், இன்ஜினியரிங் தொடர்புடைய பி.எச்.டி., படிப்புக்கு ரூ.18 ஆயிரமும், இதர பிரிவுகளிலான பி.எச்.டி., படிப்புக்கு ரூ.16 ஆயிரமும் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி : என்.ஐ.டி.,யின் ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ பதிவுக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை "Director, National Institute of Technology, Tiruchirapalli 620115" என்ற பெயரில் திருச்சி என்.ஐ.டி., கிளை ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்தினால் போதுமானது. டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் படிப்பின் பெயரைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை இந்த கல்வி நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் டி.டி.,யை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 3.1.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இரண்டு படிப்புக்கும் விண்ணப்பிக்க தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஒரு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
முகவரி
Dean (Academic),
National Institute of Technology,
Tiruchirapalli 620115.

No comments:

Post a Comment