இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் மிக அதிக அளவு ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், தகவல் தொழில் நுட்ப உபயோகத்தில் முதலிடம் என்று பல்வேறு பெருமைகளைக் கொண்டது இந்திய ரயில்வே. இந்த பிரம்மாண்ட நிறுவனம் அடுத்த 3 மாதங்களில் 2.27 லட்சம் புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட உத்தேசித்திருப்பதாக இந்திய ரயில்வேயின் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது ரயில்வேயில் 1.67 லட்சம் பணி இடங்கள் காலியாக உள்ளன. அடுத்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற உள்ளார்கள். எனவே இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்புவது தற்போது இன்றியமையாததாக உள்ளது. அதனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணி இடங்களை நிரப்புவதற்காக ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு நடத்தும் தேர்வில் தாய்மொழியிலேயே தேர்வை எழுதும் விதத்தில் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளுக்காக ஏற்கனவே கிட்டத்தட்ட 16 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வே துறையில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு இது புத்தாண்டுப் பரிசாக அமைய உள்ளது என்றே கூறலாம்.
No comments:
Post a Comment