Tuesday, January 4, 2011

விப்ரோவில் பணிபுரிய...

பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள் இன்ஜினியரிங் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள், ஐ.டி., நிறுவனங்களில் நுழைவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் முன்னணி ஐ.டி., நிறுவனமான விப்ரோ, அறிவியல் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக , பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பி.ஐ.டி.எஸ்.,) கல்வி நிறுவனத்துடன் இணைந்து நான்கு வருட எம்.எஸ்., (சாப்ட்வேர் இன்ஜினியரிங்) படிப்பை நடத்துகிறது.

இப்படிப்பை முடிப்பவர்களுக்கு விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது. இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு "பிராஜக்ட்' , விப்ரோ நிறுவனத்திலேயே வழங்கப்படும். இப்படிப்புக்கு, பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, , எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கணிதம், புள்ளியல்), பி.சி.ஏ., படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://careers.wipro.com/it/campus/india/wase.htm என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தகுதியானவர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment