சென்னை பாரத் பல்கலைக்கழகம், 2010-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்காக மிகப் பெரிய வேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் டிஜிபிளிட்ஸ் டெக்னாலஜிஸ், டிராசிஸ் சொல்யூஷன்ஸ், பேன்டெக் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட 8 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்காணல் செய்யவுள்ளன.
விருப்பமுள்ள மாணவர்கள் www.stu dentsdotcom.co.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு அட்டையை, எண் 73, கருநீகர் தெரு, ஆதம்பாக்கம் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்ய வெள்ளி (ஜனவரி 7) கடைசி தேதி. விவரங்களுக்கு 044 - 22550001 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று பாரத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment